பிறந்த நாள் வாழ்த்துக்கள் - ரவி

 உன் ஒவ் ஒரு பிறந்தநாளும்
ஆயிரம் ஆயிரம் - மலரும் நினைவுகளை
தந்து விட்டு போகும் - அது
ஆழ் கடலின் நடுவே
பாய் மர படகில் பயணிக்கும்
ஆனந்தத்தை தரும்.


 ஒரு உருவம் என்னுடனே
நிழலாய் நின்று உனக்காக
கவிதை ஒன்று
படைக்க பவ்யமாய் கேட்கும்
அப்போது பகலும் இரவும்
உன்னை பற்றிய
நினைவுகளே மனத்திரையில் ஓடும்


 உன்னை
வாழ்துவதற்கான வார்த்தையை
மனம் மகிழ்வாய்
தேடிக்கொண்டேயிருக்கும்,,,,
கிடைத்த உடன்,
இதயம் குளிர்ச்சியாய்
இனிக்கும் .



 உன் உயர் குணங்களை,
வாழ்கை பாதையின் நேர்த்தியை ,
வாழும் விதத்தை, தொழில் பக்தியை ,
அணுகு முறையை ஆனந்தமாய் - மனம்
ஒரு ஆய்வு செய்து வியக்கும் .


 சூரியனை பார்க்கும் போதெல்லாம்
ரவியான - உன் ஞாபகம் வரும்,
அர்ஜுனனை படிக்கும் போதெல்லாம்
கல்வியில் நீ ஜெயித்த நினைவு தரும்,
லட்சியவாதிகளை காணும் போதெல்லாம்
உன்னையும் மனம் காணும் ,
காதல் கொள்ளா உன் இளமை
இறுமாப்பை இதமாய் தரும்,
உன்னை பற்றி எழுதும் போதுதான்
கவிதை கூட பொய் இல்லாமல் வரும்.




 நீ பேசாத போதும் வலி ஏதுமில்லை
நீ நேசிக்காத போதும் மனம் நோக வில்லை
நீ வாசிக்காத புத்தகம் ஏதும் பரணில் இல்லை
நீ நுகராத மலரில் வாசம்மில்லை
நீ வசிக்காத வீட்டில் ஓர் உயிரும் இல்லை
நச்சத்திரங்கள் ஏதும் உன் தலை மேல் இல்லை
நிலவில் நீயில்லாமல் நீர் இல்லை
நீ இங்கு இருப்பதால் தேவ தூதர்கள் யாரும்
பூமி வருவதில்லை.
கீயூரியாசிட்டியம் மங்கள்யானும் - செவ்வாயில்
உன்னை தேட வேண்டியதில்லை.

 விரைந்தோடும் குதிரையில்
வாள் கொண்ட வீரானாய் - நீ வருகிறாய்,
அசைந்தாடும் அழகு யானையில்
அலங்கரித்த மன்னனாய் - நீ வருகிறாய்,
பலர் தூக்கும் பல்லாக்கில்
பார் போற்றும் பாரியாய் - நீ வருகிறாய்,
சிங்கத்தை வென்று, புலியை கொன்று
மக்களை காக்கும் அரசாய் - நீ வாழ்கிறாய்
விடியற் கனவு கலைந்த போது
ரவியாய் நீ தெரிகிறாய்.


 உச்சி பிள்ளையாராய்
விநாயகன் தலைவனாய் இருந்தாலும்,
பழனி முருகனாய்
கந்தன் கருணை பொழிந்தாலும்,
சாமியே,,,,,,, சரணம் என்று
ஜன திரள் ஓடுது ஐயனை நோக்கி,
அக்காவை மாரிஅம்மனாக வைத்து
அண்ணனை விநாயகனாய் கொண்டு
முருகனிடதிலே நான் நின்றால்
உனக்கு கிடைக்கிறது ஐயனிடம்
சிட்டி சிவமயம் .



 தகப்பன் வாக்குகாய்
ராமனும், லட்சுமணனும் கானகம் போய்விட
இக்கட்டில் நாட்டை காத்தது பரதன்தான்
நம்குடும்பதின் பரதன் - நீ தான்.


 தர்ம பிரபு தருமனையும்
கோப கனல் பீமனையும் தவிர்த்து
பகவான் கிருஷ்ணன்
தேரோட்டியது அர்ஜுனனுக்குதான்
நம்குடும்பதின் அர்ஜுனன் - நீ தான்.


 சக நண்பன் கரம் கொடுத்து வாழ்த்துவான்,
எதிரி தூர நின்று வாழ்த்துவான்,
காதல் தோழி மலர் கொடுத்து வாழ்த்துவாள்,
உதிர உறவுகள் விருந்து கொடுத்து வாழ்த்தும்,
நல் அரசு விருது கொடுத்து வாழ்த்தும்,
நல்ல இதயம் எங்கிருந்தும் வாழ்த்தும்,
ஏழை புலவன் கவிதை கொடுத்து வாழ்த்துவான்.

”வாழ்க பல்லாண்டு பணமோடு,பலமோடு அரசாண்டு”

அன்புடன்
சின்ன அண்ணன்

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (21-Dec-13, 4:46 pm)
பார்வை : 264

மேலே