பந்தளம் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பந்தளம்
இடம்:  Neyveli - Cuddalore district - Tamil Nadu
பிறந்த தேதி :  22-Nov-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Mar-2012
பார்த்தவர்கள்:  374
புள்ளி:  116

என்னைப் பற்றி...

என் நிஜ பெயர் ரமேஷ் பாபு . பந்தளம் \r\nஎன்ற பெயரில் என் படைப்புகளை பதிய \r\nஎழுத்தில் வருகிறேன் ,,,,,,,\r\nநன்றி !\r\nகை பேசி 7401088092, 9787309942,8939598063

என் படைப்புகள்
பந்தளம் செய்திகள்
பந்தளம் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2019 6:57 pm

என் கரம் பிடித்து
பின்னே வருவேன் என்று
அக்கினி வலம்வந்து
செய்த சத்தியம்
மறந்து போனதா ?

தலை குனிந்து என்றும்
என் சொல் கேட்பேன் என
தாலி கட்டி கொண்டது
நினைவில் இல்லையா ?

ஐந்து ரூபாய் கூட
வரதட்சணை பெறாமல்
ஆண் மகனாய்
உன்னை மணந்த போது
தெரியவில்லையா
நான் ஏழை என்று ?

உன் ஆசைக்காக
நான் மாறி மாறி
சுயம் இழந்து நின்றேனே
அப்போது தெரியவில்லையா
நான் உனக்கானவன் என்று ?

மாடாய் நான் உழைத்தாலும்
மகா ராணியாய்
உன்னை வைத்தேனே
மறுக்க முடியுமா ?

ஆரம்பத்தில்
இனித்த நான்
இப்போது கசப்பதேன்
பணம் இல்லை
வசதியில்லை என்பதால்
பதியை நாயினும் கீழாக
நடத்துதல் தான் தர்மமா ?

பணியும் கைபேசியும்
படுத்துறங்

மேலும்

பந்தளம் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Nov-2019 7:26 pm

இந்த இருட்டு காதலன்
நிலவு காதலியை
தவறாமல் பார்க்க வந்திடுவான்
சில நேரம்
காதலி வந்தபிறகு அவன் .
அறக்க பறக்க வருவான்
பல நேரம் அவன்
வந்து காத்திருக்க
அவள் மெல்ல வருவாள்
பௌர்ணமி அன்று
காதலனை அருகே
வந்து பார்த்திடுவாள் அவள்
அமாவாசையில்
அவள் வராத ஏக்கத்தில்
மேலும் கருத்து போகும்
இவன் முகம்
பாவம் அவனுக்கு தெரியாது
அவளை அவன் நெருங்கவே
முடியாது என்று
ஆனாலும் நிலவு
மனதுக்குள்ளே
இருட்டின் நினைவுகள்
மங்கலாய் தேங்கித்தான்
கிடக்கிறது தேம்பலோடு..

மேலும்

பந்தளம் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2019 5:36 pm

பிறந்த வளர்ந்த பின்தான் தெரிந்தது
வந்தது வறுமை குடும்பம் என்று
படித்து முடித்த பின்தான் தெரிந்தது
வேலை தராத வெட்டி படிப்பென்று
பழகி பலவருடம் கழித்தே தெரிந்தது
நட்பும் காதலும் சுயநலம் கொண்டதென்று
பலவருடம் கரைந்தே காலத்தில் புரிந்தது
செய்த பணி சுமை நிறைந்த களம் என்று
வாழ்வின் பாதியில்தான் தெளிவாய் தெரிந்தது
துணையாய் வந்தவள் உடனுள்ள எதிரி என்று
வளர்த்து ஆளாக்கிய பின்னே அறிவு அறிந்தது
பிள்ளைகள் நமக்கானவர்கள் அல்ல என்பது
எல்லாம் பிரிந்த போதே மெல்ல புரிந்தது
யாரும் இங்கு நிரந்தர உறவு இல்லை என்பது
வாழ்வின் கடைசி நிலையில் வருந்தி புரிந்தது
வாழ்வே மாயம் மயானமே யோகம் என்ற

மேலும்

பந்தளம் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2019 4:21 pm

தாயுடனான சண்டை
தலை தடவி
சோறு போடுகையில்
தானே செரித்து விடும்

தந்தையுடனான சண்டை
காசு கேட்டு
தலை சொரிந்து நிற்கையில்
உதிர்ந்து விடும்

சகோதர சண்டைகள்
சாய்ந்தரத்திற்குள்
உஷ்ணம் குறைந்து
அஸ்தமனம் ஆகிவிடும்

நன்பனுடனான சண்டை
நாலு நாளில் மச்சி என்று
வந்த இடம் தெரியாமல்
வடு இன்றி வடிந்து விடும்

உண்மை உறவுகளில்
உருவாகும் சண்டை
உட்காந்து பேசினால்
விட்டு கொடுத்து போய்விடும்

அலுவலக வட்டார சண்டை
அலுவலக கடைசி நாளில்
கை குலுக்கி பை என்றிடும்

சாதி சண்டைகள்
கலப்பு திருமணத்தில்
சமபந்தி போஜனமாகும்

தேச சண்டைகள் கூட
தலைவர்கள் சந்தித்து பேசினால்

மேலும்

பந்தளம் - பந்தளம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2017 4:07 pm

தண்ணீர் சுமந்து
தவழ்கிறது -என்
ஆன்ம தாகம் தீர்த்த
தேவலோக பன்னீர் !

முதல் இரவில்
கசங்கிய மலர்
காலையில்
புதிதாய் பூத்தது !


பனி அருவி
குளிக்குமா ?
தேன் துளிகள்
தூய்மை நாடுமா?

நிலவு நீர் குடம்
தூக்கி நடக்குமா ?
கவிதை
காற்று வாங்கி
பறக்குமா ?

அழகு
அலங்காரம் செய்யுமா?
அமிர்தம்
சர்க்கரை கொள்ளுமா?

சொர்கம்
குளிரூட்டு பெறுமா?
சொர்ணம்
மிளிறுதல் கோருமா?

என்னவளே
இத்தனை
காலம் காத்திருந்தேன்
இமை பொழுதும்
இனி பிரியதே - அன்பே

மேலும்

நன்றி! நன்றி!! 30-Sep-2017 6:16 pm
அன்புக்கு விடுமுறை கொடுத்தால் உள்ளங்கள் துடிப்பதை நிறுத்தி விடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Sep-2017 6:33 pm
பந்தளம் - பந்தளம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2014 1:12 pm

இவர்கள்

மாக்களிடம்
கையேந்தும் - மக்கள்.

சோலையில் வாழும்
பாலை மனதிடம்
பஞ்சம் கோரும் - பரதேசிகள்.

வள்ளலை தேடி வநது
வற்றிய குளம் கண்டு
வாயடைத்து போனவர்கள்.

ஈரம் தேடி ஓடி
ஈனப் பிறவிகளின்
வாசலில்
வாடி நின்றவர்கள்.

அகதிகளாய் வந்து
நிர்கதியாய் நொந்தவர்கள்

உதவி கேட்டு
உதை பட்டவர்கள்.

விடுதலை வேண்டி
சிறை பட்டவர்கள்

இருட்டை தாண்டி
இடுகாடு வந்தவர்கள்.

இவர்கள்
உலகம் புறம் தள்ளும்
தீண்டதகாத வேற்று கிரக வாசிகள் . .

மேலும்

நன்றி ராம் . 18-Aug-2014 10:03 am
தங்கள் கருத்துக்கு நன்றி பூபதி ---- பந்தளம் 18-Aug-2014 10:02 am
இவர்கள் பெயர் தான் தமிழர்களோ ...? 17-Aug-2014 10:34 am
சாட்டையடி .திருத்தம் வரும் என நம்புவோம் . 16-Aug-2014 2:44 pm
பந்தளம் - பந்தளம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2013 4:46 pm

 உன் ஒவ் ஒரு பிறந்தநாளும்
ஆயிரம் ஆயிரம் - மலரும் நினைவுகளை
தந்து விட்டு போகும் - அது
ஆழ் கடலின் நடுவே
பாய் மர படகில் பயணிக்கும்
ஆனந்தத்தை தரும்.


 ஒரு உருவம் என்னுடனே
நிழலாய் நின்று உனக்காக
கவிதை ஒன்று
படைக்க பவ்யமாய் கேட்கும்
அப்போது பகலும் இரவும்
உன்னை பற்றிய
நினைவுகளே மனத்திரையில் ஓடும்


 உன்னை
வாழ்துவதற்கான வார்த்தையை
மனம் மகிழ்வாய்
தேடிக்கொண்டேயிருக்கும்,,,,
கிடைத்த உடன்,
இதயம் குளிர்ச்சியாய்
இனிக்கும் . உன் உயர் குணங்களை,
வாழ்கை பாதையின் நேர்த்தியை ,
வாழும் விதத்தை, தொழில் பக்தியை ,
அணுகு முறையை ஆனந்தமாய் - மனம்
ஒரு ஆய்வு செய்து வியக்கும் .


மேலும்

எனக்கு யாரென தெரியாது அவரை ... எனினும் உங்கள் வரிகள் அழகு . வார்த்தைகள் அழகு. என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவருக்கு 21-Dec-2013 7:04 pm
நன்றி சந்தோஷ் . 21-Dec-2013 6:24 pm
அழகான கவிதை பிறந்த நாள் வாழ்த்துக்கள் 21-Dec-2013 5:07 pm
மேலும்...
கருத்துகள்

மேலே