மயானமே யோகம்

பிறந்த வளர்ந்த பின்தான் தெரிந்தது
வந்தது வறுமை குடும்பம் என்று
படித்து முடித்த பின்தான் தெரிந்தது
வேலை தராத வெட்டி படிப்பென்று
பழகி பலவருடம் கழித்தே தெரிந்தது
நட்பும் காதலும் சுயநலம் கொண்டதென்று
பலவருடம் கரைந்தே காலத்தில் புரிந்தது
செய்த பணி சுமை நிறைந்த களம் என்று
வாழ்வின் பாதியில்தான் தெளிவாய் தெரிந்தது
துணையாய் வந்தவள் உடனுள்ள எதிரி என்று
வளர்த்து ஆளாக்கிய பின்னே அறிவு அறிந்தது
பிள்ளைகள் நமக்கானவர்கள் அல்ல என்பது
எல்லாம் பிரிந்த போதே மெல்ல புரிந்தது
யாரும் இங்கு நிரந்தர உறவு இல்லை என்பது
வாழ்வின் கடைசி நிலையில் வருந்தி புரிந்தது
வாழ்வே மாயம் மயானமே யோகம் என்று .

எழுதியவர் : பந்தளம் ( ரமேஷ் பாபு ) (3-Aug-19, 5:36 pm)
சேர்த்தது : பந்தளம்
பார்வை : 87

மேலே