குரு அருள் இல்லையேல் திருவருள் இல்லை
இன்று மிக்க மகிழ்ச்சியுடன்
நான்காம் முறை தரிசனம் செய்தேன்..!!
என் உள்ளம் கவர்ந்த
கள்ளமற்ற நல்ல உள்ளங்களுடன்..!!!
கருமேனி பெரும் ஆள் அவர்..!!
கடைக்கண்கள் அருந்தேன்...!!
மலர் கமழ் செவ்வாய்
எழில் கொஞ்சும் புன்னகை..!!
சங்கு சக்கர தடக்கையன்..!!
திமிர் திறளும் திடத்தோளன்..!!
பச்சை பட்டழகன்..!!
பதக்கை மொட்டழகன்..!!
தாமரைத் திருவடிகள்..!!
செல்ல புன்னகை
நல்ல தரிசனம்..!!
மனம் குளிர தரிசனம் செய்தேன்..!!
மிக்க நன்றி என் ஆசிரியை அவர்களுக்கு..!!
💚🙏சுனந்தா பிரேம்குமார்💚🙏
ஒன்று மட்டும் புரிந்தது..!!
குரு அருள் இல்லையேல்
திருவருள் இல்லை..!!
குருவின் வழிகாட்டல் மட்டுமே
உன்னை தெய்வத்திடம் நெருங்கச் செய்யும் என..!!
குருவே சரணம்..!!🙏