ஆகஸ்ட் 15
கிளியொன்று சிறகு விரித்து
படபடத்தது இரும்புக் கூண்டில்
பால் பழக் கிண்ணம் சிதறிக்கிடந்தது
இன்று சுதந்திர தினம் சுதந்திர தினம்
கிளிக்கில்லையா சுதந்திரம் என்று
சிறகை ஓயாது அடித்துக் கொண்டிருந்தது கிளி
நான் தேசபக்தன் கூண்டை திறந்துவிட்டேன்
சொந்தக்காரனின் அனுமதி இன்றி !