வேற்று கிரக வாசிகள்

இவர்கள்

மாக்களிடம்
கையேந்தும் - மக்கள்.

சோலையில் வாழும்
பாலை மனதிடம்
பஞ்சம் கோரும் - பரதேசிகள்.

வள்ளலை தேடி வநது
வற்றிய குளம் கண்டு
வாயடைத்து போனவர்கள்.

ஈரம் தேடி ஓடி
ஈனப் பிறவிகளின்
வாசலில்
வாடி நின்றவர்கள்.

அகதிகளாய் வந்து
நிர்கதியாய் நொந்தவர்கள்

உதவி கேட்டு
உதை பட்டவர்கள்.

விடுதலை வேண்டி
சிறை பட்டவர்கள்

இருட்டை தாண்டி
இடுகாடு வந்தவர்கள்.

இவர்கள்
உலகம் புறம் தள்ளும்
தீண்டதகாத வேற்று கிரக வாசிகள் . .

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (16-Aug-14, 1:12 pm)
சேர்த்தது : பந்தளம்
பார்வை : 108

மேலே