புது மனைவி

தண்ணீர் சுமந்து
தவழ்கிறது -என்
ஆன்ம தாகம் தீர்த்த
தேவலோக பன்னீர் !

முதல் இரவில்
கசங்கிய மலர்
காலையில்
புதிதாய் பூத்தது !


பனி அருவி
குளிக்குமா ?
தேன் துளிகள்
தூய்மை நாடுமா?

நிலவு நீர் குடம்
தூக்கி நடக்குமா ?
கவிதை
காற்று வாங்கி
பறக்குமா ?

அழகு
அலங்காரம் செய்யுமா?
அமிர்தம்
சர்க்கரை கொள்ளுமா?

சொர்கம்
குளிரூட்டு பெறுமா?
சொர்ணம்
மிளிறுதல் கோருமா?

என்னவளே
இத்தனை
காலம் காத்திருந்தேன்
இமை பொழுதும்
இனி பிரியதே - அன்பே

எழுதியவர் : பந்தளம் ( ரமேஷ் பாபு ) (27-Sep-17, 4:07 pm)
Tanglish : puthu manaivi
பார்வை : 169

மேலே