காதல் மன்னன் கமலஹாசன்
காதல் மன்னன் கமல்ஹாசன் !
நடிப்பையும் காதலிக்கின்றாய்
நாட்டு நடப்பையும் காதலிக்கின்றாய்
நட்பையும் காதலிக்கின்றாய்
மதி நுட்பமும் காதலிக்கிறாய்
நாணயத்தை காதலிக்கின்றாய்
நா நயத்தையும் காதலிக்கின்றாய்
நாத்திகத்தையும் காதலிக்கின்றாய்
நாதத் தத்துவத்தையும் காதலிக்கின்றாய்
நட்டுவாங்கத்தையும் காதலிக்கின்றாய்
நடுவறுத்தலையும் காதலிக்கின்றாய்
நற்றமிழையும் காதலிக்கின்றாய்
நன்முகத்தையும் காதலிக்கின்றாய்
நாயகனாய் காதலிக்கின்றாய்
நாயகத்வமும் காதலிக்கின்றாய்
நாரனையும் காதலிக்கின்றாய்
சக நரனையும் காதலிக்கின்றாய்
நாநிலம் உன்னை காதலிக்கிறது
நல் ஆளுமையை நிரூபணம் செய்வாயா?
கவிதாயினி அமுதா பொற்கொடி