சண்டை

தாயுடனான சண்டை
தலை தடவி
சோறு போடுகையில்
தானே செரித்து விடும்

தந்தையுடனான சண்டை
காசு கேட்டு
தலை சொரிந்து நிற்கையில்
உதிர்ந்து விடும்

சகோதர சண்டைகள்
சாய்ந்தரத்திற்குள்
உஷ்ணம் குறைந்து
அஸ்தமனம் ஆகிவிடும்

நன்பனுடனான சண்டை
நாலு நாளில் மச்சி என்று
வந்த இடம் தெரியாமல்
வடு இன்றி வடிந்து விடும்

உண்மை உறவுகளில்
உருவாகும் சண்டை
உட்காந்து பேசினால்
விட்டு கொடுத்து போய்விடும்

அலுவலக வட்டார சண்டை
அலுவலக கடைசி நாளில்
கை குலுக்கி பை என்றிடும்

சாதி சண்டைகள்
கலப்பு திருமணத்தில்
சமபந்தி போஜனமாகும்

தேச சண்டைகள் கூட
தலைவர்கள் சந்தித்து பேசினால்
கையெழுத்தோடு சரியாகும்

மனைவியுடனான சண்டை
அன்றிரவே
பல் இளித்து விடும் .

எழுதியவர் : பந்தளம் ( ரமேஷ் பாபு ) (25-May-19, 4:21 pm)
சேர்த்தது : பந்தளம்
Tanglish : chandai
பார்வை : 147

மேலே