மனைவி

என் கரம் பிடித்து
பின்னே வருவேன் என்று
அக்கினி வலம்வந்து
செய்த சத்தியம்
மறந்து போனதா ?

தலை குனிந்து என்றும்
என் சொல் கேட்பேன் என
தாலி கட்டி கொண்டது
நினைவில் இல்லையா ?

ஐந்து ரூபாய் கூட
வரதட்சணை பெறாமல்
ஆண் மகனாய்
உன்னை மணந்த போது
தெரியவில்லையா
நான் ஏழை என்று ?

உன் ஆசைக்காக
நான் மாறி மாறி
சுயம் இழந்து நின்றேனே
அப்போது தெரியவில்லையா
நான் உனக்கானவன் என்று ?

மாடாய் நான் உழைத்தாலும்
மகா ராணியாய்
உன்னை வைத்தேனே
மறுக்க முடியுமா ?

ஆரம்பத்தில்
இனித்த நான்
இப்போது கசப்பதேன்
பணம் இல்லை
வசதியில்லை என்பதால்
பதியை நாயினும் கீழாக
நடத்துதல் தான் தர்மமா ?

பணியும் கைபேசியும்
படுத்துறங்குவதும்
பாழும் வாட்சப்பும்
பங்கு கொள்ளும்
உன் நேரத்தில்
எனக்காக வினாடிகள்
கூட இல்லை

என் பசி பற்றியோ
என் உறக்கம் பற்றியோ
என் அலுவல் சுமை
என் கடன் சுமை
எதிலும் உனக்கு பங்கு இல்லை
விவாதிப்பதில் விருப்பம் இல்லை

எல்லோரிடத்திலும்
சிரித்து பேசும் உன் முகம்
என்னை கண்டதும்
சினந்து சிறுத்து போவதேன்?
விவாகரத்து என்ற வார்த்தை
விருட்டென வருவதேன் ?

பணம் தான் பெரிதென்றால்
பரத்தையர் தொழிலில் கூட
பெற்றிட முடியும் அதை

காலையில் எழுந்ததும்
கழுவாத முகத்திலும்
வைத்து கொள்ளாத பொட்டிலும்
பின் கழுத்தில் சிக்கிக்கிடக்கும்
தாலியின் பரிதாப நிலையிலும்
எழுதி இருக்கிறது
உனக்கு என்மீது
எத்தனை வெறுப்பென்று

விலகி விலகி போவதில்
விளக்கமாக சொல்லி விடுகிறாய்
உனக்கு வேறு விஷயங்கள்
நிறைய வேண்டும்மென்று

எப்படியாவது
வாழ்ந்து விட்டு போ
அவசரப்பட்டு
எனக்கும் பிள்ளைகளுக்கும்
மருந்து வாங்கிவிடாதே .

எழுதியவர் : பந்தளம் ( கி. ரமேஷ் பாபு ) (2-Dec-19, 6:57 pm)
Tanglish : manaivi
பார்வை : 312

மேலே