காதல் ♥️♥️

காதல் 🌹💘

உன் மின்சார பார்வை
என் இதயத்துக்குள் காதல் ஊற்றாக உருவெடுத்து
என் உடல் முழுவதும் ஆறாக ஓடுகிறது.
உன்னை அனு தினமும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் உருவாக,
அதற்கு எதிர்பு தெரிவிப்பதாக
எப்போதும் உன்னை பார்த்து கொண்ட இருக்க வேண்டும் என்று இன்னொரு மனம் கூற,
அவளிடம் காதல் சொல்லாமலே இவ்வளவு கற்பனையா? என்று மற்றுமொரு மனம் சொல்ல,
அமாம் அவளை கண்டதும் காதல் வந்தது.
காதலை அவளிடம் எப்படி சொல்வது.
நிலவே! அவளிடம் என் காதலை எப்படி சொல்வது.
மலர்களே! சொல்லுங்களேன் என் காதலை அவளிடம் எப்படி சொல்வது.
தென்றலே நீ சொல்லேன் என்னவளிடம் எவ்வாறு என் காதலை கூறுவது.
கயல் விழியாளே!
முக்கனி சுவை இதழாளே!
இடை சிறுத்த இன்ப சுரங்கமே!
அண்ண நடை பயிலும் வண்ண மயிலே!
எழில் ஓவியமே!
என் அழகு சிலையே!
இப்படி எல்லாம் வர்ணனை செய்தால் என்னை காதலிப்பாயா!
அழகு தேவதையே
யார் தயவும் எனக்கு வேண்டாம்.
வர்ணனையும் வேண்டாம்.
அலங்கார வார்த்தைகளும் வேண்டாம்.
நாளை விடியல் நன்றாக இருக்கும்.
நாம் இருவரும் சந்திக்கும் போது
என் உதடுகள் நம் காதலை உச்சரிக்காது.
எப்போதும் உன் பெயர் சொல்லி துடிக்கும் என் இதயம் உன் பெயர் கூறி அழைக்காது.
நான் உன்னை காணும் அந்த அற்புத தருணத்தில்
நம் காதலை நீ என் கண்களில் வடியும் கண்ணீரில் உணருவாய்.
பதிலுக்கு நீ என் பெயர் உச்சரித்து "நான் உன்னை......."

- பாலு.

எழுதியவர் : பாலு (2-Dec-19, 8:48 pm)
சேர்த்தது : balu
பார்வை : 534

மேலே