இருட்டு காதலன்
இந்த இருட்டு காதலன்
நிலவு காதலியை
தவறாமல் பார்க்க வந்திடுவான்
சில நேரம்
காதலி வந்தபிறகு அவன் .
அறக்க பறக்க வருவான்
பல நேரம் அவன்
வந்து காத்திருக்க
அவள் மெல்ல வருவாள்
பௌர்ணமி அன்று
காதலனை அருகே
வந்து பார்த்திடுவாள் அவள்
அமாவாசையில்
அவள் வராத ஏக்கத்தில்
மேலும் கருத்து போகும்
இவன் முகம்
பாவம் அவனுக்கு தெரியாது
அவளை அவன் நெருங்கவே
முடியாது என்று
ஆனாலும் நிலவு
மனதுக்குள்ளே
இருட்டின் நினைவுகள்
மங்கலாய் தேங்கித்தான்
கிடக்கிறது தேம்பலோடு..