சிந்தை செய் விந்தை செய
உடலின் கருவறை மூளை
மூளையின் சந்நிதானம் சிந்தனை!
மனித விலங்கை பகுத்தறிவால்
பக்குவபடடட்தும் சிந்தனையால்
பேசும் போது வேகம் நூறு சொற்கள்
அதுவே அவன் சிந்திக்கும் போது
ஜந்நூறு சொறகள்!
சிந்தனை மனித விந்தையின் மகோன்னதம்!
பௌரர்ணமி சிந்தனை இரவை பகலாக்கும்
நிலவு சிந்தனை தூய்மைக்கு தூணாகும்
வளர்பிறை சிந்தனை நெகிழ்ச்சியை நேர்த்தியாக்கும்
நீரோடை சிந்தனை அறிவை அமிர்தமாக்கும்
தீர்க்கதரிசன சிந்தனை பாமாலைக்கு பூமாலையாகும்
அறிவியல் சிந்தனை அச்சத்திற்கு அரணாகும்
எதிமறை சிந்தனை ஏணிக்கும் எட்டாகனியாகும்
கானல் சிந்தனை காரியத்திற்கு கலங்கமாகும்
தன்னம்பிக்கை சிந்தனை ஊனத்திற்கும் உதிரமாகும்
கால சிந்தனை வெள்ளத்திற்கு வேலியாகும்
உள்ளங்கையில் உலகம் உருளுவது சிந்தனையால்
கடன் பெற்று சிந்தனை செய்ய வேண்டியதில்லை
காலங் கடந்த சிந்தனை தேவையுமில்லை
ஒரு நொடி சிந்தித்தால்
தேய்பிறையாய் உயிர் வீழ்ந்து விடலாம்
ஒவ்வொரு நொடியும் சிந்திதால்
நிலவாய் உயிர் வாழ்ந்து விடலாம்
இளைஞனே கனவுகாண் என்ற
அப்துல கலாமின் சிந்தனை
இலட்சிய மீன் பிடிக்க தூண்டிலாகட்டும்
மனமே சிந்தை கொள்
விந்தை செய....
உனக்காய் காத்திருக்கிறது
செவ்வாயக்குள்ளும்
ஓர் பொழுது......