என் பிஞ்சு என் ஆசிரியை
என் மகள் எனக்கு மகள் என்று மட்டுமே என
நினைத்திருந்தேன் இத்தனை நாளும்!
இன்றோ அவள் புரிய வைத்தாள்!
அவள் எனக்கு ஆசிரியையும் கூட என்று!
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
எனக்கு வாழ்க்கையின் வெவ்வேறான
பாடங்களை செம்பட கற்றுத்தருகிறாள் !
வீறிட்டு அழும்போது அவளை
சமாதானமாக்க முடியாத தருணத்தில்
எனக்கு பொறுமையை கற்று தருகிறாள் !
என் மடியை அவள் சட்டென நனைக்கும் போது
எனக்கு காந்தியை விட அதிகமான
சகிப்பு தன்மையை கற்றுதருகிறாள்!
அவள் பிதற்றலை பொறுமையாக கேட்கும் போது
மற்றவர்களின் கருத்துக்களை
கூர்ந்து கவனிக்க கற்றுதருகிறாள்!
அவள் தினசரி நடவடிக்கைகளை கவனிக்கும் போது
கற்றலை கற்று தருகிறாள் அவள் !
நான் வேடிக்கை காட்டி அவள் சிரிக்கும் போது
அங்கீகரிப்பது எப்படி என கற்று தருகிறாள் !
என்னை பார்த்து என்னிடம் வர எத்தனிக்கையில்
பற்றாய் இருப்பது எப்படி என கற்று தருகிறாள்!
இவை சில உதாரணங்களே !
இன்னும் என்னென்ன வைத்திருக்கிறாளோ
இந்த பிஞ்சு எனக்கு கற்றுத்தர!