மதுக்கடை
உடல் வறுத்தி
சேர்த்த செல்வம்
மனைவியிடம் அடித்து
பிடுங்கும் செயல் - வீட்டினிலே
தண்டமாய் வாழும்
வாழ்க்கை இங்கு ...
திண்டாடி மதுவுக்கு
ஏங்கும் மனது - மதுக்கடையினிலே,
தள்ளாத வயது
வரும் முன்னே
தள்ளாது விழுந்து
புரண்ட உடம்பு ... தெருவினிலே,
நிறைய வீடுகளில்
நாள்தோறும் நடக்குது
இக்காட்சிகளே
இது - தமிழ்நாட்டினிலே,
- சு.சுடலைமணி