திருஷ்டிக்கு

காய்ந்த மிளகாயும் உப்பும் எடுத்து கைக்குள்ள வைச்சுக்கிட்டு ....

"ஆடு திருஷ்டி..., மாடு திருஷ்டி... கோழி திருஷ்டி.., கொக்கு திருஷ்டி ..." இப்படி சொல்லிகிட்டே போயி கடைசில கைய காட்டி மூணு தடவ துப்புடா செல்லம்ன்னு அம்மா சொல்லுவாங்க... ! மூணு தடவை தூ தூ தூ .. துப்பினதுக்கு அப்புறம் அதை கொண்டு போயி அடுப்புல போடுவாங்க....

மிளகாயும் உப்பும் சேந்து வெடிக்காம கங்குல கிடந்துச்சுன்னா திருஷ்டி ரொம்ப இருக்குன்னு சொல்லுவாங்க...! பட்பட்ன்னு வெடிக்கும் போது திருஷ்டி எல்லாம் இல்லனு சொல்லுவாங்க...!

விஞ்ஞானத்த எல்லாம் தூக்கி ஒரு மூலையில போட்டுட்டு, இதுல அறிவு இருக்கா இல்லையான்னு யோசிக்கிற சூப்பர் மூளைய கழட்டி போட்டுட்டு பார்த்தா...அம்மாவோட அன்புன்ற ஒரு விஷயம் எவ்வளவு ஆளுமையானதுன்னு தெரிஞ்சுக்கலாம்...!

எல்லா நேரமும் அறிவால பார்த்தா வாழ்க்கை வாழ்க்கயாவா ஐயா இருக்கும்...? அன்பால பார்க்கும் போதுதானே நாம எல்லாம் இயந்திரங்கள் இல்லைன்னு உணர முடியும் !!

தாயன்பிற்கு ஈடேதம்மா
ஆகாயம் அட அது போதாது
தாய் போல யார் வந்தாலுமே
உன் தாயைப்போலே அது ஆகாது

இது படித்ததில் பிடித்தது .

இனி என் கருத்து ..

பிள்ளைக்கு திருஷ்டி பட்டால், வத்தல் மிளகாயும் உப்பும். குடும்பத்துக்கே திருஷ்டி பட்டுவிட்டால், பெரிய பூசணிக்காய் மேல சூடன் ஏற்றி நடுத்தெருவில் வீசி எறிவது. ஒரு ஊருக்கோ நாட்டுக்கோ திருஷ்டி பட்டு விட்டால் ... ? யோசிக்க வேண்டிய விஷயம் தான். பாரத் மாதா கி ஜெய் !!

எழுதியவர் : (24-Dec-13, 8:06 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 86

சிறந்த கட்டுரைகள்

மேலே