காயம் மில்லை காதல் யிருக்கிறது

வீதி வீதியாக திரிவதுகூட ஒரு சுகம்தான்...
உன் பின்னாடி அல்ல

உன்னோடு கைகோர்த்த அந்த நாட்களை எண்ணி
இந்த மண்ணோடு மொழிபேசி செல்வதற்கு

காலங்கள்தான் நம்மை சேர்க்க வில்லையென்றாலும்
நம் காதல் நினைவுகள் பூபூத்து மகிழ்விக்கிறது

காமமும் நம் காதலோடு தோற்றுவிட்டது
ஏன் தெரியுமா...
காதலுக்கு முன்னாடி நிர்ப்பது காமம்தான்
அதுவே காமத்திற்கு பின்னாடி நிர்ப்பது வெறும் உருவங்கள்தான்...
அதில் காதல் இருப்பது கடுகளவே என்பது மிகையாகாது....
அதை யெல்லாம் நம் காலுக்கு கிழ் போட்டுவிட்டது
நம்மொடைய காதல்....

சேர்ந்து வாழ்ந்தால்தான் காதல் அல்ல
பிரிந்துது சென்றாலும் ,
அதை காயபடுத்தாதவர்களே உண்மையான் காதலர்கள்

நான் காதலனாக இருக்கிறேன்
உன் உருவத்தோடு ஒன்றி அல்ல
உன் நினைவுகளோடு கைகோர்த்து மட்டும்...

எழுதியவர் : ஆறு (25-Dec-13, 9:56 pm)
சேர்த்தது : Arumugam Durai
பார்வை : 124

மேலே