உன் நினைவால் கருவுற்றேன்

காதல்
வரம் கிடைத்தும்
இன்னும்
தனிமையில்
தவம் கிடக்கிறேன்
உனை கரம
பிடிக்கும்வரை....!!!
நீ
கவிதைகள்
எழுதியே
காலம்
கடத்துகிறாய்....!
நான்
கனவு கண்டே
நாட்களை
நகர்த்துகிறேன்...!!!
இனிமையும்
கொடுமையும்
இஷ்டம்போல்
விளையாடும்
தனிமையில்....
என்ன கஷ்டம
வந்தாலும்
உன் நினைவுகளால்
கருவுற்ற
காதல்
குழந்தையை
சுமந்தபடி
என் காத்திருப்பு
தொடர்கிறது...!!!