சட்டம் சவ பெட்டியிலே

கற்பழிப்பு வழக்கில்
தண்டனை பெற்று
திரும்பி வந்து
திருந்தாமல் வந்து
மீண்டும் ஒரு
கற்பழிப்பு செய்த
மிருகமும் வாழும்
பூமி இது

பதினைந்து
சாத்தான்கள்
பாவையை
சீரழித்த
பாவ பூமி இது

ஒவ்வொரு முறையும்
நெஞ்சம் குமுறி
ரத்தம் சூடேறி
உணர்ச்சி பொங்கி
கொலைவெறி உள் ஊறி
பத்து நிமிடம்
அமைதிக்கு பின்
மனம்
மறக்கிறது
என் சமுதாய அவலங்களை

கொள்ளை அடிக்க
கொள்ளை அடித்தவனை
அரசியல்வாதி என்று
சொல்லி
அவனை காப்பாற்ற
அவசர சட்டம்
நிறை வேற்றும்
அரசாங்கம்

கற்பழிப்பை
உயிரோடு ஒப்பிட்டு
மரண தண்டனை
நிறைவேற்றா
அவலம்
தொடரும்
கற்பழிப்பு சம்பவம்

என்னால் என்ன
செய்ய முடியும்
உணர்ச்சி வச பட்டு
அந்த மிருகங்களை
அருவா கொண்டு
அழிக்க முடியும்
நல்லது செய்த
நானும்
கொலைக்காரன்

சட்டம்
சவ பெட்டியில்
வைத்து
சமாதி ஆகி போனது

இதற்கு என்ன
தீர்வு
அரசியலையும்
அரசாங்கத்தையும்
நம்பி
ஒரு மண்ணும் ஆகாது

பெண்ணை காப்பாற்ற
முடியாத
அரசாங்கம்
ஆண்மை இல்லாத
ஆண் மகனுக்கு சமம்

அரசாங்கமே
நாட்டின் ஒரு
மூலையில்
நடக்கும் அவலம்
உன் காதுக்கு கூட
எட்டாது
ஆனால் நீ
போடும் சட்டம்
வரும் சந்ததியை
காப்பாற்றும்

எழுதியவர் : kaarthick (30-Dec-13, 4:47 pm)
பார்வை : 177

மேலே