28 வாழும்சமூகத்தின் துயர்துடைக்க மறந்ததேன் மறுப்பதேன்
சொந்தக் கவிதை - 28
காலில் முள் குத்தியபோது
கண்கள் கண்ணீர் விட்டதுவே
கண்ணில் தூசுகள் விழுந்தபோது
கைகள் மெதுவாய் துடைத்தனவே.
வயிறு பசியால் துடித்தபோது
பல்வாய்நாக்கு ஒன்றாய் உழைத்தனவே
உறுப்புகள் சற்றே தளர்ந்தபோது
வயிறு சக்தியை அளித்தனவே.
நெஞ்சிற்கு வலியெடுத்தால்
உடம்பிற்கு வியர்க்கிறது
கண்கள் குளமானால்
இதயம் துடிக்கின்றது
உன்னிடம் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும்
மற்ற உறுப்பின் துயர் துடைக்கும்போது
அன்புமனிதா நீமட்டும் நீவாழும்சமூகத்தின்
துயர்துடைக்க மறந்ததேன் மறுப்பதேன்?