பார்க்க முடியாதவை

தூரிகை படாத ஓவியம்
பகல் நிலவு
ரா சூரியன்
தாவணியில் மங்கை
வைகையிலே தண்ணீர்
மது அரக்கன் இல்லா தமிழகம்
சுத்தமான தெருக்கள்
முதியோர் இல்லம் இல்லா நகரம்
கருணை காட்டும் காவலர்
லஞ்சம் வாங்காத அலுவலகம்
தடையில்லாத மின்சாரம்
முன் பதிவில்லா ரயில் பயணம்
செலவில்லாத கல்யாணம்
அடக்க விலையில் அடுக்கு மாடி வீடு
முன் பணம் வாங்காத வேலையாள்

எழுதியவர் : arsm1952 (30-Dec-13, 4:37 pm)
பார்வை : 68

மேலே