கருவறுப்போம் கயவனை

காலை 10.00 மணி.

நீதிமன்ற வளாகம் பரபரப்பாய் காணப்பட்டது.
சலசலப்பை சமாளிக்கும் சக்தி இல்லாமல் நீதிபதி காணப்பட்டார்.
குற்றவாளி கூண்டில் நிற்கும் பெண்ணை பார்த்து உங்கள் பெயர் என்ன என்றார் வக்கீல்.அந்த பெண் கபாலி என்றாள்.
நீங்கள் தானே கடந்த ஜூன் மாதம் 10 ம் தேதி ரயிலில் தனியாக பயணித்த பெண்ணை கற்பழிப்பு செய்தீர்கள் என்றார்.ஆம் என்ற பதிலை அந்த பெண் சொல்ல,நீதிமன்றத்தில் சலசலப்பு தொடங்கியது.
நீதிபதி,இவர் தான் கபாலி என்பதற்கு ஆதாரம் என்றார்.
அப்போது வக்கீல் குறுக்கிட்டு டாக்டர் தந்த மருத்துவ ரிப்போர்டை சமர்ப்பித்தார்.
அதில் கபாலியின் ஆண்மை நீக்கப்பட்டு பெண்ணாக மாற்றப்பட்ட தகவல் இருந்தது.நீதிபதி இதன் விவாதம் நாளை தொடரும் என்று கூறி எழுந்தார்.அன்று இரவு தொலை காட்சியில் நாட்டின் பல பகுதியிலும் பல கற்பழிப்பு குற்றவாளிகள் பெண்ணாக மாற்றப்பட்ட தகவல் ஒளிபரப்ப பட்டது.
மறு நாள் , நீதிமன்றத்தில் அவசர வழக்காய் முதலில் கபாலி வழக்கு விசாரிக்கப்பட்டது.அதில் நீதிபதி போலீசாரிடம் கபாலி பெண்ணாக மாற்றப்பட்டது எவ்வாறு என கேள்வி எழுப்பினார்.அப்போது போலீஸ் அதிகாரி,கபாலி ஜாமீனில் வெளி வந்த சிறிது நாட்களில் கடத்த பட்டு பின் மயக்க நிலையில் வைக்க பட்டு அவரை பெண்ணாக மாற்றி இருக்கிறது ஒரு கும்பல் என்று தெரிவித்தார்.நீதிபதி உடனே குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கும் படி கூறினார்.
அன்று மாலை காவல் நிலையத்தில் ஆயிரம் பேருக்கு மேல் நாங்கள் தான் இந்த குற்றம் செய்தோம் என்று சொல்லி சரணடைய வந்தனர்.
அவர்களை விசாரிக்க முடியாமல் திணறி,அடுத்த நாள் நீதிமன்றத்தில் அவர்களை கொண்டு நிறுத்தினார்.
நீதிபதி அவர்கள் முன் ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்தீர்கள் என்றார்.அவர்களில் ஒரு இளைஞன் மட்டும் முன் வந்து நீதிபதி அவர்களே,
நாங்கள் செய்தது குற்றம் இல்லை.தீ பற்றி ஊரே எரியும் போது முதலில் தீ அணைக்கும் படைக்கு தான் தெரிவிக்கிறோம் ஆனால் அது வரும் வரை நாம் சும்மா இருப்பது இல்லை நம்மால் ஆன வரை தீயை அணைக்க முயற்சிப்போம் அது போல் தான் கற்பழிப்பும்.தீ மாதிரி பரவும் இது ஒரு நாள் எங்கள் வீட்டிலும் பரவும் என்ற பயத்தோடு எத்தனை நாள் நாங்கள் வாழ்வது 17 வயதிற்கு கீழ் என்றால் அவன் சிறியவன் என்று மூன்று ஆண்டு தண்டனை தந்து தீர்ப்பு அளிக்கிறிர்கள்.ஆனால் அவனோ விடுதலை ஆகி அதே தப்பை செய்கிறான்.பயம் தர வேண்டிய நம் சட்டம் தான் அவர்களுக்கு பாது காப்பே கொடுக்கிறது.
இனி பொறுத்து எங்களால் இருக்க முடியாது என்பதால் இப்படி செய்தோம்.நாட்டில் இன்று நிறைய குற்றவாளிகளை இப்படி பெண்ணாக மாற்றியதும் நாங்கள் தான்.பெண்ணை மோக பொருளாய் பார்த்தவர்கள் இனி பெண்ணாய் வாழ்வதே சரி என்று நாங்கள் நினைத்தோம் என்றார்.
நீதிபதி இவர்கள் செய்ததை தவறு என்று கூறினாலும் அவர்களுக்கு தண்டனை ஒன்றும் தர முடியாத சூழ்நிலை.ஆயிரம் பேர் மட்டும் வந்து இருந்தாலும் அவர்கள் பின்னால் கோடி மக்களின் மனசாட்சி உள்ளதை உணர்ந்து.
அவசர சட்டம் பிறப்பிக்க பாராளு மன்றத்தை கேட்டு கொண்டார்.
மக்களின் மனதை புரிந்து கொண்ட அரசாங்கம் கற்பழிப்புக்கு மரண தண்டனை அறிவிப்பு செய்தது.

குறிப்பு : நம் நாட்டை விட பல மடங்கு பின்னோக்கி உள்ள ஒரு நாட்டில் நடக்கும் சம்பவமாய் இதை நினைக்கவும் ஏன் என்றால் நம் நாட்டில் இப்படி ஒரு தீர்ப்பு வர சாத்தியம் இல்லை.

எழுதியவர் : கார்த்திக் (31-Dec-13, 7:09 pm)
பார்வை : 128

மேலே