புதுயுகம் படைத்திட வேண்டுமடா தமிழா

கேட்டுக் கொள்ளடா தமிழா இதை;
கேட்டுக் கொல்லடா தமிழா...

வீரதமிழ தேசமடா அது ஈழதமிழ தேசமடா;
தொப்புள் கொடி சொந்தமென நம் செந்தமிழ் காலம் சொல்லுதடா...

வீரதமிழ வேங்கையெல்லாம் வெற்றி நடை போட்டுவர;
வெறி நாயின் கடிபட்டு ரத்த துளிகள் சிந்துதடா...

பிழைக்கவந்த தெரு நாய்கள் பொறுக்கி எதையோ தின்றதனால்;
புத்தி மாறிப் போனதடா அதை சுட்டெரிக்க வேண்டுமடா...

கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று நடத்தலாம்;
கத்தி கொண்ட மிருகம் மீது கல்ளை கொண்டும் அடிக்கலாம்...

உறவெல்லாம் உடுப்பிழந்து உருகுளைந்து போனதனால்;
உருமாறி வெறி நாயை வேட்டையாட வேண்டுமடா...

விழித்திட வேண்டுமடா தமிழா;
புதுயுகம் படைத்திட வேண்டுமடா தமிழா...

பாவமொன்றும் அறியவில்லை கேட்க கூட நாதியில்லை;
இந்த நிலை தொடருமென்றால் செத்து மடிய வேண்டுமடா...

வீரம் கொண்ட தமிழனுக்கு வேகமொன்று வேண்டுமடா;
வேகம் இழந்து போனதனால் வெற்றி நழுவிப் போனதடா...

தமிழ் பால் குடிக்கும் தமிழனுக்கு உணர்வு ஒன்று வேண்டுமடா;
உணர்வு ஒன்றுசேர்கையிலே உலகம் நமது மகுடமடா...

முட்செடிகளாக ஈழத்தில் தமிழ் தேசமெங்கும் கிடக்கவே;
களை எடுக்கும் கலப்பையாய் ஒரு கடல் தாண்ட வேண்டுமடா...

தமிழ் ஈழமெங்கும் பூக்களாய் தினந்தொறும் அங்கு பூத்திட;
தமிழ் செடியாக நாமெல்லாம் கோ(கூ)டி விதையாக வேண்டுமடா!!!

எழுதியவர் : கார்த்திக்... (6-Jan-14, 7:57 am)
பார்வை : 603

மேலே