சந்திராயனும் மங்கள்யானும் கானா பாடல்

நல்லா ஒரு கானாப் பாடத்தானே ஆச
பாடத்தானே ஆச - - -உங்க
டல்லான மனம் கும்மாளமுடன்
ரசிக்கத்தானே வேணும் - - உங்க
கவல தானே போனும்

நேத்து ஒரு ஒளியும் ஒலியும்
காண ஏங்கும் கூட்டம். . . . இப்ப
பார்த்து தினமும் பரவசிக்க
சேனல் பல கூட்டம் . . . வீடு
தேடி வரும் பாட்டும் !,!

சந்திராயனும் மங்கள்யானும்
நல்லா போயி வரனும் -----நம்ம
பேரப் புள்ளைங்க குதித்து
நிலவில் பாண்டி ஆட வேணும். . .
பாண்டி ஆட வேணும். ! !

கைபேசியும் கால் சென்டரும்
காலாவதி ஆகி. . . காலாவதி ஆகி
டெலிபதி என்னும் சேவை ஒண்ணு
சிறகடித்தே வரனும். .
சிறகடித்தே வரனும். . !

சுகரு பிளட் பிரஸ்சர் என்றால்
என்ன என்று வியந்தே. .
என்ன என்று வியந்தே
நாளை உலகம் அகராதியில்
அர்த்தம் தேட வேணும் --- அந்த
நிலையும் நாளை வரனும்..,

எழுதியவர் : மல்லி மணியன் (7-Jan-14, 1:22 pm)
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே