மனந்திறக்கிறேன் - இரசனைத்தின்ற தவறுகள்

மனந்திறக்கிறேன் - இரசனைத்தின்ற தவறுகள்

மேட்டுப்பாளையம் கோயம்பத்தூர்
தேசியநெடுஞ்சாலைக்கிடையிலே வீரபாண்டிப்பிரிவு மற்றும் பிரஸ்காலனி என்கிற இவ்விருவிடங்களுக்கிடையில் சுமாரொரு 150 மீட்டர் இடைவெளியிலமைந்ததிருக்கும்

அதுவோர் எழில்நிறைந்த சாலையோரப்பூங்கா

அச்சாலையில் பயணிப்போரையந்த பூங்கா சரளமாக ஈர்க்கின்றதாகவேயமைந்திருக்கிறது

அதற்கடுத்துள்ள இரும்புப் பட்டறையில் எனது நண்பனைக்காண நின்றுக்கொண்டிருந்தேன் நான்

எதேச்சையாகதிரும்பியபொழுது அப்பூங்காவையொட்டியிருக்கும்
பாதசாரிகள் நடைப்பயிற்சிக்கொள்ளும் வெளிப்புறநடைபாதையிலமைந்த நாற்காலியில் இரசிக்கும்படியானக்காட்சியொன்று

அடுத்த அரைமணிநேரத்தில் நடக்கவிருக்கும் பெரும்விபரீதமொன்றை அதைக்கண்டு இரசிக்கும் அனைவரின் புத்தியிலிருந்தும் மறைத்தபடி ஈர்க்கப்பட்டிருந்ததக்காட்சி

ஆம் கருமேகங்கள் வியாபித்துவிழுங்கிய அதுவொரு மந்தமான அக்டோபர்மாத இடைநாளின் அந்திமாலை

நிலத்திலிருந்துபொறுக்கிய சின்னஞ்சிறுக் கற்களை கையிலேநிறைத்தவண்ணம் அசுரவேகத்தில் அச்சாலையைக்கடக்கின்ற மகிழூந்துகளினுள்ளே எறிகின்ற விளையாட்டிலே அச்சிறுமியினார்வம் புலப்பட்டிருந்தது

அவளைக்கடந்துச் செல்லுகின்ற
எல்லா வாகனங்களினுள்ளும்
அக்கற்களையெறிந்தவண்ணமேவிருக்கிறாள்

ஒன்றுமே சரியாக விழாததால் உதடுகளைச்சுழித்து மீண்டும் மீண்டும் முயற்சிக்கின்றக்காட்சி அத்தனையழகாய் இருந்ததெனலாம்

அது தவறானச் செயலெங்கிலும் அக்காட்சி அங்கிருந்தோரை வெகுவாக ஈர்த்ததென்பதே உண்மை,,,

உயிரைக் கிழித்து நெட்டிக்கச்செய்துகொண்டு பலத்த ஹாரன் எச்சரிக்கையொலியுடன் கடக்க முயற்சித்த மாருதி எஸ்டீம் காரொன்றிலே அச்சிறுமியின் குறித்தப்பாது விழுந்தது அவளெறிந்த அக்கற்களிலொன்று

கைக்கொட்டிச்சிரித்த அச்சிறுமியின் புன்னகையெழில்க்கண்டுவியந்த அடுத்தநொடி .. அப்பூங்காவைக் கடந்து ஐம்பதுமீட்டர் தொலைவிலிருக்கும் சற்று சாய்நிலையிலிருந்த வலுப்புள்ள புளியமரமொன்றில்
இராட்சதவேகத்தில் மோதியதந்த கார்

அக்காரில் பயணித்தவர்களொரு பஞ்சாபி குடும்பத்தைச் சார்ந்தவர்கள்
35 வயது மதிக்கத்தக்கவிருக்குமொரு சர்தார்ஜி
30 வயதிருக்கின்ற அவரின் மனைவிமற்றும் இளஞ்சிவப்புநிற கௌன் அணிந்துக் கொண்டிருந்த அவர்களின் அந்த 4 வயதுள்ள அழகியப்பெண்குழந்தை

அக்காரையோட்டிச் சென்றவரால்
எத்தனைமுயன்றும் அக்கார்க்கதவுகளை
திறக்கவியலாமலேயேபோனது ,,

புறத்துள்ளவர்களின் முயற்சியுந்தோற்றது ,,, அக்கார் சிலின்டரால் நிரப்பப்பட்டுள்ளதால் இலேசாகக் கசிந்த தையோ ஆல்கஹால் வாயுமணம் பரவலாக நிரம்பத் தொடங்கியது

வெளியிலிருந்தவனைவரும் கூச்சலிட்டனர் உதவிக்கு அனைவரையும் அழைத்தவாறு

அருகிருக்கும் தீயணைப்புத் துறையினருக்கு தங்கள் கைப்பேசியால் அழைப்புவிடுத்தவண்ணம் அங்குமிங்குமாக அலைந்துக் கொண்டிருந்தாலும் அக்காரிலகப்பட்டவர்களுடன் தொடர்ந்து நம்பிக்கையளிக்கும் விதமாக "நாங்களிருக்கிறோம்
அச்சுறவேண்டாம் இதோவந்துவிடுவார்கள் தீயணைப்புத் துறையினர்கள் என்ற வண்ணமே சொல்லிக்கொண்டிருந்தோம்

இலேசான மயக்கநிலையிலிருந்த அவரின் மனைவி அகத்து வெப்பமணம் தாங்கவியலாது அவசரமாக கார்க்கதவுகண்ணாடியை ஓங்கியுடைக்கலானார் ... அக்கண்ணாடிச் சில்
உடைந்துத்தெறித்து சிறுதுளைகொடுத்ததும் அக்காரினகத்துள்ள சிலிண்டரானது ,, டாங்கிலே நிரப்பப்பட்டக் கச்சா எண்ணையுடஞ்சேர்ந்து ஆக்ரோஷத்துடன் வெடித்துச்சிதறியது

வானுயரப் படர்ந்தந்த அரக்கத்தீஜுவாலையை ஒன்றுமே செய்யமுடியாதநிலையிலும் எங்களனைவரின் கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையிலுமக்காட்சியை வெறித்துப்பார்த்து நின்றுக்கொண்டிருந்தோம் சுயநினைவுத் தப்பியவர்களாக

அவர்கள் தீக்கிரையாகிக் கதறுமிரைச்சலைகூட எங்களனைவரிஞ்செவிகளும் ஏற்கமறந்ததென்றே சொல்லுவேன்

என் கண்களில் தென்பட்டவந்த கொடூரக்காட்சியினிடையே அச்சிறுமி
மெழுகுபொம்மையாய் உருகிக்கொண்டே மரித்தக் காட்சியை இன்று நினைத்தாலும் என் உயிரறுக்கிறது


தீயணைப்புப் படையினரின் சாலைநெரிசலால் வரத்தாமதமானது என்ற பேச்சினாலும் மெத்தனப்போக்கினாலும் ஓரழகிய போதுவிட்டமொட்டும் அச்சிறுக் குடும்பமென்கின்ற பூந்தோட்டமும் காலனுக்கு விருந்தானதென்னுங்கோபமே
எல்லோரிடத்திலும் பரவலாகக்காணப்பட்டது

நானோ,,,அப்பூங்காவையொட்டியிருக்கின்ற அன்னடைப்பாதை நாற்காலியில் அப்பொழுதும் நடந்ததறியாது சிரித்து விளையாடியப்படியேவிருக்கின்ற அச்சிறுமியைப் பார்த்தவண்ணமே இருந்தேன்

ஆனால் அப்பொழுது என்னாலவளின் செய்கைகளை இரசிக்கமுடியவில்லை
இருந்தாலும் சபிக்கவும் மனம்வரவில்லை

இதையெந்தகணக்கில்லெடுப்பதென்றே தெரியவில்லை

அச்சிறுமி செய்தது தவறென்றால் ,,அவளோ சிறுமி

அக்காட்சியைக் கண்டுரசித்த இச்சமுதாயமும் நானும் நல்லவர்களாகிடமுடியுமா ?? ,,,,

பதிலாக அச்சிறுமிக்கு யாரேனும்
எடுத்துச் சொல்லியிருந்தால்
இப்படிப்பட்டச்சம்பவமொன்று நேர்ந்திருக்குமா ??

இல்லை இதுதானன்று மரித்தவர்களுக்கான விதியா ???

எப்படியோசித்தாலும் இன்றுவரையிதற்கான
விடைக்கிடைக்கவில்லையென்னில்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (12-Jan-14, 1:43 am)
பார்வை : 174

மேலே