அரிக்கேன் விளக்கு

தினமும் வலி கொண்டு ஒளி தருகிறாள்
இருள் கொண்ட அன்றைய வாழ்க்கை
ஈழத்தில் மிசாரமும் இல்லை இருளில்
நிம்மதியும் இல்லை சந்தோசமும் இல்லை
என்னவள் என் துணையானவள் வெளிச்சத்தில்
கவலைகளை மறந்தேன் கல்வி கற்றேன்
என்னவன் மழை காற்றுக்கு பறி போகாமல்
கண்ணாடி சிமினி ஆடை கவசம் இட்டு இருந்தால்
தினமும் என் மனதில் மறக்க முடியா வலிகள்
அவளோ வலிகளை தனதாக்கி பிரகாசித்தால்
அகல் விளக்கு என் அருகில் அழகாய் சிரிப்பாள்
எனக்காக தினமும் தன்னை வருத்தி ஒளி தருவாள்
எரியும் விளக்குக்கு உயிர் கொடுக்கும் திரி கிடைப்பாள்
அவள் குடிக்கும் மண்ணெண்ணெய் விலையோ அதிகம்.
அதனை கஷ்டப்பட்டு வரிசையில் நின்று வாங்கும் போது
எவ்வளவு துன்பங்கள்... தினமும் மின்வெட்டு.ஒளி வெட்டு
பல வருடங்கள் மின்சாரமோ வெட்கம் ஒழித்து கொண்டது
என்னவள் விளக்கோ அணையா தீபமாக சுடர் தருவாள்
நானோ இருளின் அடியில் நறுமணமோ மண்ணெண்ணெய்
இருளில் துலங்கிய வெளிச்சமொன்று வீச பிஞ்சு மனது
கவலைகளை மறைத்து கல்வி கற்றேன் கவலைகள் ஏனோ
கவலைகள் என்னை விரட்ட கல்வி இனிக்க வில்லை...
காரணம் பல பல ஆனாலும் என் இனியவள் விளக்கோ
வலிகள் கொண்டே சுடர் தந்தாள் இராணுவம் வரும் செய்தி
நாய்களின் எச்சரிக்கை சப்பாத்து நடை ஒலி சத்தம் காதுகளில்
துயரத்தையும் கண்ணீரையும் துடைக்கும் கரமாக என்னவள்
அணையாதவளை அணைய வைத்தே உறங்கு என்பேன்
விளக்கு வெளிச்சத்தில் மண்டியிட்டு அமர்ந்து படித்தேன்
இராணுவம் படுபாவிப் பயல்கள் இரவெல்லாம் ரோந்து
என்னவளோ வெளிச்சம் தருவாள் ஆனாலும் இராணுவமோ
கதவை காலால் உதைந்து மிரட்டுவான் துப்பாக்கி முனையில்
அறியா சிறு வயதில் என் பழைய கால உண்மை நினைவுகள்.
வடுக்கள் என் மனதில் என்றென்றும் எரியும் அணையா தீயாக...