வேறற்ற அன்பு

கண்ணிலான் காணான் தன்னின்றற்ற காட்சிகள்
காதிலான் கேளான் காததூரக் கேள்விகாள்
மூக்கிலான் நுகரான் மற்றுற்ற மணமொன்றும்
தோலிலான் அறியான் தனதற்ற மற்றொன்றும்
நாவிலான் நவிலான் புறசுவைப் பொய்யொன்றும்
கண்செவிமூக்கு தோல் நாவுசொல் பொய்த்தோய்ந்தோர்
மண்ணில் அறியார் வேறற்ற அன்பதனை

எழுதியவர் : (15-Jan-14, 8:27 pm)
பார்வை : 75

மேலே