எல்லாம் அழகு
அழகு என்பதை உள்ளம் சொல்லும்
உள்ளம் என்பது பலவாராகும்
நிறத்தில் இல்லை அழகின் கோலம்
குணமே அழகின் வடிவம் ஆகும்
வௌ்ளை நிறத்தில் சந்திரன் அழகு
கறுப்பு நிறத்தில் முகிலது அழகு
காக்கைக்குத் தன் குஞ்சழகு - என்றும்
தாய்க்கு அழுக்காயினும் மழழையழகு
பசித்தவன் வாய்க்கு உணவழகு
கவி புணைவாருக்கு கவிக்கரு அழகு
உழைப்பாளிக்குத் தொழிலழகு
ஆடவன் நெஞ்சில் பெண்ணழகு
என்றும் எதிலும் அழகுண்டு
அதை புரிந்தவர் வாழ்வில் சிறப்புண்டு
மானிடா நீயிதைப் புரிந்திட்டால்
உனது வாழ்வும் வளமாகும்