மூன்று தோழர்களின் பொங்கல்
ரகுமானும்,ராபர்ட்டும்,
ரங்காச்சாரிக் கூட்டில்,
ரம்மியமாய் பொங்கலிட்டனர்.
ரகுமான் தந்த அரிசியும்,
ராபர்ட் தந்த வெல்லமும்
ரங்காச்சாரி அடுப்பில்
ரசனைப் பொங்கலாய் பொங்கியது.
மத நல்லிணக்கத்தின்
மாசில்லா மாண்பினை இந்த
மனித நல்லினங்கள்
மகிழ்ந்தேக் கொண்டாடின பொங்கலை.
ரகுமானின் குடும்பமும்,
ராபார்ட்டின் குடும்பமும்,
ரங்காச்சாரிக் குடும்பத்தில்
சமத்துவப் பொங்கலை கூடிக்களித்தன.
ரங்காச்சாரி பெற்றோர்
ரகுமானுக்கும்,ராபர்ட்டுக்கும்
ரசனைமிகு புத்தாடையை
பாசமிகு நேசத்துடன்
அளித்தார்கள்.- அவர்களும்
அணிந்தார்கள். - மற்றொரு பாரதவிலாஸ்
இந்தப் பொங்கலில் மூன்றுக் குடும்பமும்
இன்பமுடன் கொண்டாடின.
ஆச்சாரங்கள் மதங்களில் இருந்தாலும்
ஆசாபாசங்கள் மனங்களில் இருந்ததால்
ஆபாசங்கள் மூன்று தோழர்களிடம் இல்லை.
(இது ஒரு கற்பனைக் கவிதை.)