நீ வேண்டும்
என் உதிரத்தின்
நிறமாய் நீ வேண்டும்!
என் மூளையின் முந்நூறு
அறைகளிலும் நீ வேண்டும்!
என் சுவாசமாய் நீ வேண்டும்!
என் நினைவலையின்
சாட்சிகளாய் நீ வேண்டும்!
என் இதழில் இதமான
புன்னகையாய் நீ வேண்டும்!
என் நெஞ்சத் துடிப்புகளின்
ஓசையாய் நீ வேண்டும்!
என் மஞ்சத் தவிப்படக்கும்
மன்மதனாய் நீ வேண்டும்!
எனக்கு மட்டுமே நீ வேண்டும்!
நீ இல்லையென்றால் -
இறுதியென்பது எனக்கு
இப்போதே வேண்டும்!

