பதில்

பொண்டாட்டீன்னா இப்டிதான் இருக்கனும் !!

அன்பான குடும்பம்தான். ஆனால் கணவனுக்கோ சூதாடும் பழக்கம் தொற்றிக்கொண்டது.

அதை விட அவன் தயாரில்லை. இதனால் இருவருக்கும் சதா சண்டை. மனைவி சொன்னாள் "சூதாடுவது கெட்டப்பழக்கம்" என்று!

கணவனோ மறுத்தான்.

சூதாடுவது கெட்டப்பழக்கம் கிடையாது. மகா பாரதத்திலேயே பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியை வைத்து சூதாடி இருக்கிறார்கள்"

அதைக்கேட்ட‌ மனைவி அமைதியாகச் சொன்னாள்,

பாரதத்தில் பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் அதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் !!

எழுதியவர் : முரளிதரன் (17-Jan-14, 6:44 pm)
பார்வை : 93

மேலே