தில்லுமுல்லு
பரீட்சையில்
தில்லுமுல்லு
பல செய்து
பாசாக வேண்டுமென்ற
பதைபதைப்பில்
முட்டாள்தனம் செய்யும்
மாணவரே,
பணம் கொடுத்து
கிடைக்கும் சான்றிதழ்
கல்விக்கு
பெருமை சேர்க்குமோ ....
ஊழலால் வரும் புகழ்
என்றும் நிலைத்திடுமோ..!
செயற்கை காற்றை
நீங்களே உருவாக்கி
அடுக்கடுக்காய்
குற்றம் பல செய்து
வானம் நோக்கிப்
பறக்கின்றீர்
வெற்று தூசிப் படலமாக.....!
இதுதான் உம்
இறைநீதிக் கொள்கையோ.!
நீங்களெல்லாம்
சத்திய புருஷர்களோ.....!!!!!!