தெருவில் உருளும் காகிதம்

மூங்கிலினால் பொருளாகி...
மரக்கூழால் பக்குவமாய்...
வெண்பனியாய் வார்த்தெடுத்து,
பார்வையிடும் கண்களுக்கு மைத்தீட்டி,
பன்மொழி சித்திரங்களால்...
முத்து முத்தாய் வரிகளினை,
என் உருவில் பதித்திருந்தேன்.

பிஞ்சு முதல் கோடிவரை
கைத்தவழும் உருவானேன்.
மாணவரின் கைத் தொட்டிலிலே
தாலாட்டி வளர்ந்து வர...
புத்தகம் எனும் குடும்பத்திலே,
தொகுப்பாக மகிழ்ந்து இருந்தேன்.
தன்னந்தனியாக பிரிந்ததனால்,
காற்றாடும் திசையானேன்.

முன்பு வாழ்ந்த நினப்பையெல்லாம்
பின்பு நினைவி கூறுகையில்,
பிஞ்சு குணம் அறியலையே
பிய்த்து மனம் களிக்கிறதே
பட்டமாகி விண்வெளியில்...
பட்டாணி பொட்டலமாம்...

நடுத்தெருவில் வாழ்வு இப்போ...!
கூத்தாடி வாழ்வு இப்போ...!
மிதிப்படும் சக்கர சாட்டையில் ,
தெறித்தோடும் அபிநய தாளத்தில்,
நடனமிடும் நங்கை நானே!!!

எழுதியவர் : loka (21-Jan-14, 1:26 pm)
பார்வை : 99

மேலே