கதை சொல்லிகள்

கதை சொல்லிகளின்
தோட்டத்தில்
கவிதைகள்
முளைப்பதில்லை
இட்டுக்கட்டும் முனைப்பு
தான் அதிகம்
வான வீதியில்
வார்த்தைகளை
விதைத்து விட்டு
கற்பனை மலர்களை
எதிர்ப்பார்ப்பவர்கள்
பூமியில் விதைக்கும்
விதைகளே பொய்த்து
போகும்போது வானத்தில்
விதைத்ததை அறுவடை
செய்வது எட்டாக்கனியே...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (21-Jan-14, 2:02 pm)
பார்வை : 56

மேலே