காக்க காக்க

விஷ்ணு என் முன்புறத்தைக் காக்க
கிருஷ்ணர் என் பின்புறத்தைக் காக்க
ஹரி என் தலையைக் காக்க
ஜனார்த்தனர் என் இதயத்தைக் காக்க
ஹ்ரிஷீகேசர் என் மனதைக் காக்க
கேசவர் என் நாவைக் காக்க
வாசுதேவர் என் கண்களைக் காக்க
சங்கர்ஷணர் என் காதுகளைக் காக்க
ப்ரத்யும்னர் என் மூக்கைக் காக்க
அநிருத்தர் என் தோலைக் காக்க
வனமாலி என் கன்னங்களைக் காக்க
ஸ்ரீவத்சர் என் கீழ்ப்பகுதியைக் காக்க
விஷ்ணுவின் சக்கரம் என் இடது பக்கத்தைக் காக்க
விஷ்ணுவின் கதை என் வலப்பக்கத்தைக் காக்க
கருடன் என் முயற்சிகள் அனைத்திலும் உதவட்டும்
வராஹம் நீரில் காக்க
வாமனர் ஆபத்தில் காக்க
நரசிம்மர் வனங்களில் காக்க
கேசவர் எல்லா இடங்களிலும் காக்க
ஹிரண்யகர்ப பிரபு பொன்னைத் தருவார்
கபில மகாப்பிரபு உலோகங்களைத் தருவார்
விஷ்ணு என் எதிரிகள் எல்லாரிடமிருந்தும் காப்பாற்றுவார்
விஷ்ணு என் பாவங்கள் அனைத்தையும் போக்கிவிடுவார்
விஷ்ணு என் மனதை ஆட்சி புரிந்து எனக்கு ஞானத்தையும்
அறிவையும் தருவார்
நான் விஷ்ணுவைத் தியானித்துவிட்டு இந்த ரட்சையை
அணிந்துகொள்கிறேன்.
இப்போது நான் பயமின்றி உலகில் சஞ்சரிக்கலாம்.
பூதங்கள் என்னை வெல்லமுடியாது.
தேவர்கள் என்னுடன் இருக்கிறார்கள்.
ராட்சதர்கள், பிசாசுகள், சிக்கலான வழிகள், அடர்ந்த வனங்கள்,
நீரில் மூழ்குதல் முதலியவற்றிலிருந்து நான் பாதுகாக்கப்படுகிறேன்.
திருட்டு, மின்னல், பாம்புக்கடி, நோய்கள் முதலியவற்றிலிருந்து நான்
பாதுகாக்கப்படுகிறேன்.

எழுதியவர் : முரளிதரன் (22-Jan-14, 10:50 am)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : kaakka kaakka
பார்வை : 129

மேலே