சொல்லடி இது ஏனோ

பகலிலும் நிலவாய், என் மனதில் அழையாய்
உன் அழகிய முகம் என்னை கொள்ளவது ஏனோ,
உன்னை பார்த்ததும்,
என் மனசுக்குள் எத்தனை மாற்றம்,

உன் புன்னகை நட்சத்திரமாய் ஜொலிஜொலிக்க
அதை நினைத்து பார்த்து,
மனசு பட்டாம் புச்சி போல் பறக்க...
மறக்காத உன் முகம் என் முன்னே வந்து செல்ல..!
உன் விழி காண நான் பறந்தோடி வர,

உன்னை கண்டதும் என் மனதில் ஆசைகூட,
நிலை புரியாது நான் நிற்பதும்,
நாம் மனம் சேர துடிப்பது ஏனோ....
இந்த மாற்றம்,
புது ஏக்கம் சரிதானோ
சொலடி என் காதலி,
இதற்கு கரணம் உன்விழி என்னை சீண்டியது தானோ...?

---- முத்துராம்

எழுதியவர் : முத்துராம் (24-Jan-14, 4:26 pm)
சேர்த்தது : rmmuthuram
Tanglish : solladi ithu eno
பார்வை : 106

மேலே