நினைவுகளுடன்
காத்திருந்தேன் என் விழியோடு உன் விழி உறவாடும் தருணம் பார்த்து
காத்திருந்தேன் உன் மூச்சு காற்று என்னை தென்றல் ஆக வருடும் தருணம் பார்த்து..
காத்திருந்தேன் உன் பேச்சு, என்னை இசையாய் ரசிக்க வைக்கும் நேரம் பார்த்து.
காத்திருந்தேன் உன் மடி சாய்ந்து தாயின் அரவனைப்பை உணரும் தருணம் பார்த்து
காத்திருந்தேன் உன் கோபத்திற்கு பயந்து, தந்தையாய் கண்டிக்கும் தருணம் பார்த்து
காத்திருந்தேன் நீ என்னை ஏற்கும் நாளை – உன் காதலியாய்
ஆனால்
நான் மட்டுமே காத்திருந்தேன்
உன் காத்திருக்கும் நொடிகளில் நான் இல்லை என தெரிந்தேன்
என் வாழ்க்கை இனிமேல் நீ எனக்கு கொடுத்த இந்த காத்திருந்த நொடிகளோடும் உன் நினைவகளோடும்