எனக்கும்அவனுக்கும்ஒரே பிரச்சினை

அவனுக்கு வாய்தான் பிரச்சினை.
அடிக்கடி...உளறத் துவங்கிவிடும்.
யாரும் அவனைப் பேசாத போது...
அவன் வாய் தானாகவே...
அவனைப் பற்றிப் பேசத் துவங்கிவிடும்.
அவனளவில்...
தற்காப்பு கவசமாய் இருக்கும் வாய்
பிறரைப் புறம் சொல்லுகையில்...
தாக்குதலுக்கான ஆயுதமாகிவிடும்.
எதையும்...
கதையாக்கிவிடும் அவன் வாய்...
சரித்திரங்களில் பொய்யைப் புகுத்தத்
தயங்கியதேயில்லை.
"மனு" வில் துவங்கி..."மண்டல் கமிஷன்" வரை
பேசும் அவன் வாய்...
இட ஒதுக்கீட்டை...இடத்திற்குத் தகுந்தபடி பேசும்.
சாதிகளையும், கடவுள்களையும்...
பேதமாக்கி சந்திக்கு இழுக்கும் அவன் வாய்...
அவனளவில்...
அவைகளைக் கைவிடுவதே இல்லை.
சொற்களால் ஆன உலகத்தில்...
அவனுக்கு வாய்தான் வாழ்க்கை.
வரமா?..சாபமா?...எனத் தெரியாத
வாயுடன் அவன் நடத்தும் வாழ்க்கை
முரண்களால்...இடறுகையில்...
சமாதானம் கொள்கிறான்....
"வாயுள்ள பிள்ளை பிழைக்கும்"...
என யாரோ சொன்னதை நினைவில் நிறுத்தியபடி.

எழுதியவர் : rameshalam (27-Jan-14, 6:32 pm)
பார்வை : 102

மேலே