வருந்தி எழுதுகிறேன்
ஏர் பூட்டி உழுது
180 நாளும்
பெத்த புள்ளையாய் காத்து
தை முதல் நாளில்
அறுத்த நெல்லில்
சொந்தங்களோடு
பொங்கலிட்டு
பொங்கலோ பொங்கல்
என கூவியது போய்....!
360 நிமிடம் வரிசையில் காத்திருந்து
இலவச அரிசி
ரேஷனில் வாங்கி
தன் வீடு
தன் பிள்ளையென
மரபு மறந்து
வரலாறு தெரியாத
மானங்கெட்ட இனமானதே
என் தமிழினம்...!
மாட்டின் தலையில் துண்டு கட்டி
மாட்டோடு மல்லுகட்டியது போய்
தொல்லைக்காட்சியில் வரும் முரட்டுக்காளை பட்த்தை
பார்த்து பரவசபடும் நிலையில்
2014 பச்சை தமிழன்...
பாட்டன் முப்பாட்டன்னிலிருந்து
வேட்டி, துண்டு-பாவடை, தாவனியென
காலந்தொட்ட
பாரம்பரிய உடை
ஜீன்ஸ் உலகத்தில்
முழ்கியதும்
இன்று
என் சகா..
சகாயம் குரல் கேட்டும்
கேட்காதமாதிரி அலையுதே
என் தாய் தமிழினம்...!
பிறக்க போகும் வள்ளுவன் ஆண்டில்(2014+31=2045)
புதிய உலகம் காண
முனைவோம்.
புற்றில் இருந்து பூத்த
ஈசலாக இருந்தால்
வரலாறு- ஒரு நாள் தான்...!
நாம் அறிவோம்...
நம்மிலிருந்து உருவானதது தான் வரலாறு...!