ஒரு தாயின் குமுறல்

துடிப்பு இல்லா இதயம்
உயிருக்குத்தான் வேண்ணா
துடுப்பு இல்லா ஓடம்
வாழ்க்கைக்குதான் வேண்ணா

பசி பஞ்சம் பட்டினி - என
பாத்து பாத்து வளந்தே(ன்)
பந்தம் பாசம் இருந்தும்-நா(ன்)
பிச்சை தானே எடுத்தே(ன்) !

இரத்தம் குடிச்ச மகனும்
நடுத் தெருவில் விட்டான்
நா ஆசைப்பட்ட மகளும்
வாய்கரிசி கொடுத்தா
கை பிடிச்ச கணவனும்
கடவுள் கிட்ட இருந்தான்

ஈ எறும்பு கடிக்காம
தூசு தண்ணி தீண்டாம
ஊரு கண்ணு படாம
பொத்தி பொத்தி வளத்தி
ஆளாக்கி விட்டு
பொண்ணு கைய பிடிச்சு கொடுத்து
சோறு தண்ணி கேட்ட என்ன
மாரு மேலே மிதிச்சான்
பாலு தந்த என்ன
பாடையல படுக்க வைக்க எண்ணினான்

வயது வந்த பொண்ணு
பூவாலே அலங்கரிச்சு
பூலோகம் மெச்சிட
மணவாளன் கட்டினான்
பண்ட பாத்திரம் கழுவி
மூத்திரம் மலத்த அள்ளி
வளத்தி விட்ட என்ன
விசத்த குடிக்க சொன்னா

சொத்த பிரிக்க கேட்டு
நா பெத்த தங்கம்
நட நடையா வந்து
கை எழுத்த வாங்கி
வீட்ட விட்டு விரட்டி
பிச்சை எடுக்க வெச்சான்

ராணி மாதிரி வாழ்ந்தேன்
ராஜா கிட்ட வந்தேன்
வான் நிலவா வளந்தேன்

பிச்சை கேட்ட மனசு
கல்லாகி போச்சு
கொள்ளி வைக்க பொடுசு
இல்லாம போச்சு

இரவுக்கு கண்ண மூடி தூங்குறேன்
உசுர மட்டும் எடுத்துக்கோ
இரக்கம் உள்ள கடவுளே…

எழுதியவர் : (28-Jan-14, 10:10 pm)
Tanglish : oru thaayin kumural
பார்வை : 240

மேலே