வெப்பச் சாரல்-கே-எஸ்-கலை

தொடரும் புறக்கணிப்பு
முகம் சிவந்து போயிருக்கிறது
தபால் பெட்டி !
╰☆╮❀╰☆╮
பணக்காரர்கள்,
திருடர்கள், கொஞ்சம் கவிஞர்கள்
புத்தககடை ராக்கையில் !
╰☆╮❀╰☆╮
மாற்றான் வீட்டு மல்லிகை
வாசம் வீசிக் கொண்டிருந்தது
மாற்றான் வீட்டில் !
╰☆╮❀╰☆╮
விளக்குத்திரி
அணைந்தது-எரிந்தது
இராத்"திரி"
╰☆╮❀╰☆╮
எதையெதையோ சாப்பிட்டு
அவனுக்கு தொந்தி-அவனைச் சாப்பிட்டு
அவளுக்கு தொந்தி !

எழுதியவர் : கே.எஸ்.கலை (29-Jan-14, 8:21 pm)
பார்வை : 217

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே