மாயக்கண்ணா

சிறையில் பிறந்து கண்ணா
மாதர் மனதை சிறை பிடித்தாய்
குறும்பு செய்யும் குழந்தை கண்ணா
கட்டி வைத்த உரலையும் துரும்பாக்கினாய்
மண்னை உண்டு கண்ணா
வாயில் வின்வெளியை காண்பித்தாய்
நாகத்தின் மீது கண்ணா
நாட்டியம் ஆடி வியக்க வைத்தாய்
கன்னியர் கவனக்குறைவை கண்ணா
ஆடைகளை அட்புறபடுத்தி உணர்த்தினாய்
மங்கையர் மனங்கவர கண்ணா
நண்பர்களுடன் சேர்ந்து சேட்டைகள் புரிந்தாய்
புயலில் சிக்கிய மக்களை கண்ணா
புன்னகைத்து சுண்டு விரலில் மலையேந்தி காப்பாற்றினாய்
நீல வண்ண மேனியில் கண்ணா
நின் பாதம் சரன் அடைய செய்தாய்
மெல்லிய மயில் இறகில் கண்ணா
மதிகெட்ட மனிதர்களை மாற்றினாய்
புல்லாங்குழலின் இசையில் கண்ணா
புண்பட்ட மனதை குணமாக்கினாய்
மயக்கும் சிரிப்பில் கண்ணா
மாயமாய் மனம் கவர்ந்தாய்
கல்யாணம் ஆகா பெண்களின்
கனவு காதலன் நீயே!
கற்பம் தரிக்கா தாய் உள்ளங்களின்
கண்தோன்றா பிள்ளையும் நீயே!
உன்னை தரிசித்த நொடியில்
உள்ளம் உருகி உரைந்து
உற்சாகம் பெறுகுதே
மணிவண்ணா!!!
மாயக்கண்ணா!!!