விழிமொழி

எழுதவே எண்ணுகிறேன்
எழுத்துக்கள் ஆயிரம்!
மறந்ததே எல்லாமும்
என் செய்தாய் மந்திரம்!
வழிதனைப் பற்றியே
வந்தேன் உன் கால் தடம்!
குழிதனைப் பெற்றேனே
செந்தேன் உன் முற்றிடம்!
விழிதனைப் போற்றவே
தந்தாய் நீ பொற்கிழி!
பழியெனைத் தொற்றவே
செய்தாயோ சிறு வழி!
விழிதனைக் கண்டதும்
கற்றேனே புதுமொழி!
எளியனைத் தாங்கிடு
எழுதிடவே விழிமொழி!
பெண்ணே நீ பெண்ணல்ல
அதனினும் உயர்தரம்!
என்னுள்ளே இயங்கும்
எழுத்தாணி எந்திரம்!
எழுதவே எண்ணுகிறேன்
எழுத்துக்கள் ஆயிரம்!