காதலும் காமமும்
காதலும் காமமும்..!
-எஸ்.ஹமீத்.
காதல்-
ஓர் அழகிய பூ..
வாடிப் போகாத வரை
வண்ணமும் வாசமுமாய் இருக்கும்...!
காமம்-
ஓர் அபாய தீ..
அளவுக்கு மிஞ்சினால்
எரித்து விடும்...
********
காதல் ஒரு கூடை...
அது
அன்பு மலர்களையும்
பாசக் கனிகளையும்
சுமக்கும்..!
காமம் ஒரு குடை...
ஆசை மழை முடிந்தால்
அப்படியே சுருண்டு
மூலையில் முடங்கிவிடும்..!
*******
காதல் ஓர் உணர்வு நதி...
கல்யாணக் கடலில் கலக்கும் வரை
தடைகள் தாண்டி அது
ஓடும்...!
காமம் ஓர் உணவுப் பொதி..
அவிழ்த்துத் தின்றுவிட்டால்
அப்புறம்
குப்பை மேட்டில்தான் அது வீழும்..!
********
ஆதலால்-
காதல் கொள்வோம்...!
காமம் கொல்வோம்..!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
