தமிழுக்காக, தமிழுக்காக
பரிசு வேண்டி
பாடில்லான் தமிழ் கவிஞன்
.
வெகுமதி சென்றடைந்தது
அவனை இல்லம் நெருங்கி
வறுமையில் தோய்ந்தாலும்
தமிழ் அவனை விட்டு விடவில்லை .
வாடினாலும் ,பட்டாலும்
அவன் யாரையம் நாடவில்லை.
என்னே அவனின் தன மேல் நம்பிக்கை
வாழ்ந்தான் அதோடு .
பொருள் இரந்து நாக்கு புரளாது
தயையும் வேண்டாது.
பரிசுக்காக , பெருமைக்காக, தேர்வுக்காக
பாடினான் என்று சான்று இல்லை
பாடினான் இறுதி வரை
தமிழுக்காக தமிழுக்காக.