2சூஃபி கவிதை----அஹமது அலி----

1. இச்சைக்குப் பழகிய மனம்
....கட்டுப்பாடுகளில் கதறுகிறது
....சுதந்திரம் அடிமை விலங்கு!


2.வெற்று நிலத்தை குளமென்ற
....கொக்கின் தவத்தால்
....குளமாகிடா நிலம்!


3.சிறகுகள் இருந்தும்
....பறக்காத பறவை
....பறவையாம்!

4.தூண்டாத விளக்கும்
...இருள் வாசத்தின் வசம்
...ஒளி மறுப்பல்ல..!

5.என்புகளில் சதை போர்த்திய
...உடலில் உயிரைத் தேடுதல்
...அறிவின் அறியாமை.!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (3-Feb-14, 9:24 am)
பார்வை : 387

மேலே