சோற்றுக்கலையும் கூட்டம்

ஆட்சிகள் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும்
சோற்றுக்கலையும் கூட்டம்
சுற்றிக் கோண்டே தானிருக்கிறது...
சாலையோரம் மரங்களை நட்டோமோ
இல்லையோ?
பசி பிணி மனிதர்களை நட்டுவைத்தோம்
பிச்சைகாரர்கள் என்று பெயரும் வைத்தோம்
பஞ்சப் பராரைகளாய் அலைய வைத்தோம்
வயிற்றை வறுமை திண்ண
வாழ்வை வெறுமை திண்ண...
பயணித்துக் கொண்டிருக்கிறது்
இவர்கள் வாழ்க்கை.....
பிச்சை எடுத்து தர்மத்தை
வாழ வைத்து கொண்டிருக்கிறார்கள்
ஓரிரு ரூபாய்க்கு
நம்மை தர்ம பிரபுவாய்
மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்...
இவர்களும் மாற வேண்டும்
இவர்களுக்கும் மாற்றம் வேண்டும்.....