புதியதோர் பாரதம் செதுக்கு

சிற்பியே புதியதோர் பாரதம் செதுக்கு...
கல்லாமை, இல்லாமையோடு
இயலாமையும், முயலாமையும்
மாண்டு போகட்டும்...
ஊழல் என்னும் பேரரக்கன்
ஒழிந்தே போகட்டும்
தீவிரவாதம் தீக்கிரையாகட்டும்
மதவாதம் மண்ணோடு மரிக்கட்டும்
ஆய்தங்கள் தேவை இல்லா
அகிம்சை பெருகட்டும்....
கையூட்டு எனும் சொல்லே
காணாமல் போகட்டும்
செம்மொழி யாவுமே
செழித் தோங்கி வளரட்டும்
இலக்கண், இலக்கியங்கள்
இமயம் வரை உயரட்டும்
காலம் தவறாது
பருவ மழை பொழியட்டும்
விளை நிலங்களில்
விளைச்சல் கொழிக்கட்டும
வேலை இல்லா திண்டாட்டம்
வேரோடு அழியட்டும்
கவினுறு கைத்தொழில்கள்
கவித்துவம் பேசட்டும்
காசுக்கு ஓட்டு போடும்
காலமது மாறட்டும்
ஆன்மீகம் கலாச்சாரம்
புத்துயிர் பெற வேண்டும்...
சிற்பியே புதியதோர் பாரதம் செதுக்கு
இணையில்லா பாரதத்தை
இப்பிறப்பில் காண வேண்டும்..

எழுதியவர் : சித்ரா ராஜ் (4-Feb-14, 10:59 pm)
சேர்த்தது : சித்ராதேவி
பார்வை : 87

மேலே