அழகிய நதிக் கரையில்

அள்ளி எடுத்த நதி நீரில்
அழகு வானம் நான் பிடித்தேன்
நிலவுக்கு என் கைக்குள்
நிஜமாக தொட்டிலமைத்தேன்..!!

விரலிடையே நிலவு வழிய
வியந்து ரசிக்கிறேன்......நான்
தூக்கி வைத்த கைவழியே திமிறி வழியும்
துடிப்பான சிறு குழந்தையென
விரலிடையே நிலவு வழிய
வியந்து ரசிக்கிறேன்......
வியந்து ரசிக்கிறேன்.....

விழுந்த நிலா சிரித்தபடி
விரையாமல் அப்படியே நின்றிருக்க.....
சுற்றித் துள்ளும் மீன்கள் காட்சி
சுக அழகு அம்மம்மா......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Feb-14, 5:37 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 60

சிறந்த கவிதைகள்

மேலே