12 வது தொகுப்பின் வடிவாக்கம்

அன்பு நண்பர்களுக்கும் , தமிழ் உள்ளங்களுக்கும் ,
இதுவரை என் ஆக்கங்களை 11 தொகுப்பாக்கி , ஒவ்வொன்றும் ஒரு தலைப்பில் புத்தக வடிவமாகி , வண்ணத்தில் வைத்துள்ளேன்.
நேற்று என் 12 வது தொகுப்பினை ,
" மனவெளியில் படிந்த பனித்துளிகள் "
எனும் தலைப்பிட்டு வண்ணமிகு புத்தக வடிவில் வெளியிட்டேன் . ( விழா ஒன்றும் இல்லை ) . தனிப்பட்ட முறையில் .
அனைத்தும் உங்கள் ஆசிகளுடன் , ஆதரவுடன் , அளித்த ஊக்கமுடன் .
எதிர்காலத்தில் இதுவரை எழுதியுள்ள சுமார் 600 கவிதைகளையும் ஒரே புத்தகமாக்கி வெளியிடலாம் என்ற எண்ணம் பலரும் உந்துதலால் எழுந்துள்ளது. இதை ஒரு தகவலுக்காக சொல்கிறேன்.
என்றும் தொடரும் என் கவிப்பணி. இறுதி நேரம் வரை இனிமைத்தமிழில் , எட்டிடும் அளவில் , கவிதைகளை படைப்பதை மனதில் உறுதியாய் கொண்டுள்ளேன் .
மிக்க நன்றி
உங்கள் கருத்துக்கள் என்றும்போல தொடரட்டும். குறைகளை சுட்டி காட்டிட தயங்கவேண்டாம் .
என்றும் உங்கள் நண்பன்
சகோதரன்
பழனி குமார்